13.2 C
New York
Thursday, April 24, 2025

300 பேருக்கு மேல் உயிருடன் புதையுண்டனர்! – தோண்டத் தோண்ட சடலங்கள்.

பபுவா நியூகினியாவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற நிலச்சரிவில் ஆறு கிராமங்கள் முற்றாக அழிந்து போயிருப்பதாகவும், 300 பேர் உயிருடன் புதைந்து போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எங்க மாகாணத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில், மக்கள் உறக்கத்தில் இருந்த போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால்,1,182 வீடுகள் முற்றாக நிலத்தில் புதைந்து போயிருப்பதாக அந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, 100 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அவசரமாக மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நிலச்சரிவில் புதையுண்டு போனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles