20.4 C
New York
Thursday, April 24, 2025

போதையில் இருந்து எதிர்கால சந்ததியை காக்க கோரி வடமாகாணத்தை சுற்றி நடை பயணம்

போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம் என்ற தொனிப் பொருளோடு வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த குறித்த ரோஷன் என்கின்ற இந்த இளைஞர் தற்போது தனது உடல்நல குறைவிலிருந்து சற்று தேறிய நிலையில் இந்த நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து இந்த எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரியே குறித்த நடை பயணத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருநஅது ஆரம்பித்த நடைபயணம் 3 நாட்கள் வடமாகாணத்தை சுற்றி நடந்து வவுனியாவில் நிறைவுபெறும்

Related Articles

Latest Articles