25.8 C
New York
Tuesday, July 22, 2025

காலணியில் கார்த்திகைப் பூ – கிளம்பும் எதிர்ப்பு.

இலங்கையில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது காலணித் தயாரிப்புகளில் கார்த்திகைப் பூவின் படத்தை அச்சிட்டு விற்பனைக்கு விட்டுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் வெள்ளவத்தை காட்சியறையில் கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மலராக – மாவீரர்களை நினைவுகூரும் சின்னமாக தமிழர்கள் கார்த்திகைப் பூவை மதித்து வரும் நிலையில், இலங்கையின் காலணி தயாரிப்பு நிறுவனம், இதனை காலணியில் பதித்துள்ளது.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கார்த்திகை பூவை பாதணிகளில் அச்சிட்ட நிறுவனத்துக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

Related Articles

Latest Articles