18.3 C
New York
Monday, September 8, 2025

இலங்கையில் காலடி வைக்க முன்னரே வசூலில் இறங்கிய எலான் மஸ்க்!

இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவைக்கு முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

09 அமெரிக்க டொலர்களைச் செலுத்தி இந்த முன்பதிவைச் செய்ய முடியும் என்றும், இந்த முன்பதிவு தொகையை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், ஸ்டார்லிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில் இந்தோனேசியாவில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்டார்லிங்க் இணையச் சேவை நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கிற்கும் இடையில் நடந்த சந்திப்பில், இலங்கையில் ஸ்டார்லிங்க் செய்மதி இணையச் சேவையை ஆரம்பிக்க அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன் வரும் டிசம்பரில் இலங்கை்கு வருவதற்கும் எலான் மஸ்க் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே,  ஸ்டார்லிங் இணைய சேவை தற்போது முன்பதிவை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்னரே, இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles