15 C
New York
Friday, April 25, 2025

கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்.

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நேற்றுக் காலை  இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருந்து வந்த UL 309  சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் அபுதாபியில் இருந்து வந்த  EY 394 என்ற Etihad Airways விமானம்,  ஆகியனவே, கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல், மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சிங்கப்பூரில் இருந்து வந்த UL 309 சிறிலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக, கொழும்பில் இருந்து மத்தளவுக்கு புதிய பணியாளர்களை சிறிலங்கா ஏர்லைன்ஸ் அனுப்பியுள்ளது.

Related Articles

Latest Articles