22.8 C
New York
Tuesday, September 9, 2025

ஐஸ்லாந்து ஜனாதிபதி தேர்தலில் பெண் தொழிலதிபர் வெற்றி.

ஐஸ்லாந்தின் புதிய ஜனாதிபதியாக, பெண் தொழில்அதிபர் ஹல்லா தோமஸ் டோட்டிர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.

ஐஸ்லாந்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், பெண் தொழிலதிபரான ஹல்லா டோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 55 வயதான டோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளையும்,48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

இதனையடுத்து ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஐஸ்லாந்தின் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 1980 ம் ஆண்டில் விக்டிஸ் பின்னபோகாடோட்டிர் ஐஸ்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

Related Articles

Latest Articles