21.5 C
New York
Wednesday, May 13, 2026

மகளை தவறான முறையில் வீடியோ எடுத்த தாய் கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம்  பகுதியில்  தனது மகளை தவறான முறையில் அலைபேசியில் வீடியோ  எடுத்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய, இரண்டு பதின்ம வயது பெண் பிள்ளைகளின் தாயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனை பிரிந்து  வாழ்ந்து வரும் இவர், தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அவரை தவறான முறையில் வீடியோ  எடுத்துள்ளார்.

இதனை சிறுமியின் தங்கையான 10 வயது சிறுமி கண்டு, தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles