17.1 C
New York
Wednesday, September 10, 2025

பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து விடுபட்டது பேர்கன்ஸ்ரொக்.

உக்ரைன் அமைதி மாநாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிட்வால்டனில் உள்ள பேர்கன்ஸ்ரொக் பாதுகாப்பு வலயங்கள் நேற்று மாலையுடன் நீக்கப்பட்டன.

இதுதொடர்பாக நேற்று மாலை X தளத்தில் நிட்வால்டன் கன்டோனால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் வெளியேறிய பின்னர், இந்த பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இனி எந்த சோதனையும் இருக்காது, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கு செல்வதற்கு எந்த அடையாள அட்டையோ,  வாகன ஸ்டிக்கர்களோ தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

46.3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பேர்கன்ஸ்ரொக் மீதான வான்வெளி மூடல் நேற்று நள்ளிரவு வரை பராமரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles