28.5 C
New York
Wednesday, August 12, 2026

சூரிச் பொலிஸ் உயர்அதிகாரி கைது.

சூரிச் கன்டோன் பொலிஸ் உயர் அதிகாரி  ஒருவர், பணியில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது தடுப்புக்காவலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜூரிச் சட்டமா அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு நிதிக் குற்றம் தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பார்.

முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் தனியுரிமைப் பாதுகாப்பு கருதி கூடுதல் தகவல்கள் எதுவும் வழங்கப்படாது என்றும், குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து பல்வேறு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles