3 C
New York
Monday, December 29, 2025

சுவிஸ் வெள்ளத்தினால் 6 நீர்மின் நிலையங்கள் மூடப்பட்டன.

தென்கிழக்கு சுவிற்சர்லாந்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால், பல நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் தற்போது 6 மின் உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, அக்ஸ்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிசாக்ஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான புயல் வெள்ளத்தை  தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறு நீர் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், சில சேதமடைந்துள்ளதாகவும்,  எரிசக்தி நிறுவனமான அக்ஸ்போ தெரிவித்துள்ளது.

அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும், இரண்டை விரைவாக செயற்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்றும், நான்கு மின்நிலையங்களில் விரிவான பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles