21.1 C
New York
Sunday, June 28, 2026

அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்- 180 பயணிகளின் நிலை?

சூரிச்சிலிருந்து இத்தாலியின் துறைமுக நகரமான பிரிண்டிசிக்கு புறப்பட்ட சுவிஸ் விமானத்துக்குள் பரவிய அசாதாரண மணத்தினால், விமான அவசரமாக தரையிறக்கப்பட்டது.

LX1722 என்ற இலக்கமுடைய விமானம், நேற்று  பிற்பகல் 1:50 மணிக்கு இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கபினில் இருந்த அசாதாரண மணம் பரவியதை தொடர்ந்தே மீண்டும் சூரிச் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது.

அந்த விமானத்தில்  180 பயணிகள் இருந்தனர் என்றும்,  அவர்களை ஜெனிவா வழியாக மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை அவர்கள் பிரிண்டிசியை அடைவார்கள் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles