-0.7 C
New York
Sunday, December 28, 2025

வழமைக்குத் திரும்பியது ஜெனிவா விமானப் போக்குவரத்து- பல விமானங்கள் ரத்து.

ஜெனிவா விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நேற்றுக் காலை மீண்டும் வழமைபோல இயங்கத் தொடங்கியுள்ளதாக  விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

ஜெனிவா விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தின் அடித்தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செவ்வாய்க்கிழமை இரவு,  ஜெனிவா பகுதியில் உள்ள வான்வெளி இரண்டு மணி நேரம் மூடப்பட்டது.

நேற்று அதிகாலை 12.30 மணியளவில் மீண்டும் பகுதியளவில் செயற்படத் தொடங்கிய, விமானக் கட்டுப்பாட்டு மையம், நேற்றுக் காலை தொடக்கம் வழமைபோல இயங்கத் தொடங்கியது.

ஜெனிவாவுக்கு வரவேண்டிய 30 விமானங்களும், ஜெனிவாவில் இருந்து புறப்பட வேண்டிய 22 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் போனதுடன், புதன்கிழமை காலை வரை விமானங்கள் வழமை போல புறப்பட முடியவில்லை.

நேற்று அதிகாலையில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்போது வழக்கம் போல தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – swissinfo

Related Articles

Latest Articles