-3.3 C
New York
Sunday, December 28, 2025

சுவிசில் நடந்த உள்ளாடை ஓட்டப் போட்டி – பரிசு என்ன தெரியுமா?

ஐன்சீடெல்ன்  (Einsiedeln) கன்டோனல் ஜிம்னாஸ்டிக்ஸ் திருவிழாவிற்குப் பின்னர், உள்ளாடை ஓட்டப் போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் உள்ளாடையுடன் ஒரு புல்வெளியைக் கடந்து ஓடினர்.

ஒரு ஜோடி தங்க உள்ளாடைகள் பரிசை வெற்றி கொள்வதற்காகவே அவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

Lütisburg ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம் டிக்டாக்கில் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதில் 300 வரையான ஆண்கள் பங்குபற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles