தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள வலஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சியரே மற்றும் சியோனுக்கு இடையிலான A9 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
கன்டோன் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இருப்பதாக கன்டோனல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததைத் தொடர்ந்து ரோன் நதி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளம் மற்றும் குப்பைகள் பாய்கின்றன.
இதனால் நேற்றுக் காலை சியர் மற்றும் சியோனுக்கு இடையில் A9 நெடுஞ்வீதி மூடப்பட்டது.
சிம்ப்லோன் உட்பட,கன்டோனில் உள்ள பல ஏனைய வீதிகளும் செல்ல பயன்படுத்த முடியாதவையாக உள்ளன.
சிம்ப்லோன் ரயில் பாதையிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வலஸில் சுமார் 320 தீயணைப்பு வீரர்கள், 100 சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், போக்குவரத்து உள்கட்டமைப்பிற்குப் பொறுப்பான துறைகளின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நகராட்சி சேவைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.