13.4 C
New York
Thursday, May 14, 2026

யாழ்ப்பாணத்தில் பெண் குத்திக்கொலை- கணவன் கைது.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் நேற்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

திவிகரன் நிஷானி என்ற 29 வயதான பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலேயே நேற்றுமாலை  இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.  

சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles