25.4 C
New York
Thursday, August 13, 2026

பரந்தன்- பூநகரி வீதியில் விபத்து- குடும்பஸ்தர் பலி.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றுப் பகல் இடம்பெற்ற  இந்த விபத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles