4.1 C
New York
Monday, December 29, 2025

சூரிச் ஏரியை நீந்திக் கடக்கும் போட்டி மீண்டும் ஒத்திவைப்பு.

சூரிச் ஏரியை நீந்திக் கடக்கும் போட்டி நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சூரிச் ஏரியை நீந்திக் கடக்கும் நிகழ்வு, ஜூலை 3 ஆம் திகதி நடக்கவிருந்த நிலையில், மோசமான  வானிலை காரணமாக ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், வானிலை நிலைமைகள் சீரடையாத காரணத்தினால், நாளை புதன்கிழமை இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சூரிச் எரியை நீந்திக் கடக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் இந்த நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஓகஸ்ட் 19ஆம் திகதி தொடக்கம் விற்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles