சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகள், 8.5 கிலோகிராம் கொகெய்ன் மற்றும் 88,000 சுவிஸ் பிராங்குகளை கைப்பற்றியுள்ளன.
மேற்கு ஆபிரிக்காவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக,மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் பத்து பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என்று சமஸ்டி பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூலம் -Zueritoday

