23.8 C
New York
Wednesday, August 19, 2026

சூரிச் விமான நிலைய வீதியை மறித்து போராட்டம்.

சூரிச் விமான நிலையத்திற்கு செல்லும் பாதையை மறித்து, காலநிலை செயற்பாட்டாளர்கள் குழு  போராட்டம் நடத்தியுள்ளது.

நேற்றுக்காலை  மூன்று செயற்பாட்டாளர்கள் பதாகைகளுடன் சூரிச் விமான நிலைய வீதியில் அமர்ந்திருந்து, போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.

இருப்பினும், பத்து நிமிடங்களுக்குப் பின்னர், சூரிச் கன்டோனல் பொலிசார், விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து வெளியேற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

இப்போதே செயற்படுங்கள் குழு வைச் சேர்ந்தவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசமடைந்து வரும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதில் தொடர்ந்து செயற்படத் தவறிவரும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதே,  அவர்களின் நோக்கமாக இருந்தது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles