24.2 C
New York
Sunday, June 22, 2025

வாரிசு இல்லாததால் மூடப்படும் 128 ஆண்டுகள் பழைமையான பேக்கரி.

பேர்ன் கன்டோனில்,  Ursenbach இல்  128 ஆண்டுகளாக இயங்கிய பாரம்பரிய Schär பேக்கரி மூடப்படுகிறது.

இதன் உரிமையாளர்களான ஹெய்ன்ஸ் மற்றும் உர்சுலா ஷார் ஆகியோர், ஐந்து ஆண்டுகளாக இந்த பேக்கரியை நடத்துவதற்கு ஒரு வாரிசைத் தேடினர்.

ஆனால் அவர்கள் அதில்  வெற்றிபெறாத நிலையில், ஜூலை 31ஆம் திகதியுடன் பேக்கரியை மூட முடிவு செய்துள்ளனர்.

128 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்த பேக்கரியை இவர்கள் இருவரும் 32 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

உடல் நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களால் இதனை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதனால் அந்தப் பிராந்தியத்தில் விறகின் மூலம் தயாரிக்கப்படும் பேக்கரி உற்பத்திப் பொருட்களை பெற முடியாத நிலை ஏற்படவுள்ளது.

பேக்கரி மூடப்படவுள்ள நிலையில் நாளை 27ஆம் திகதி வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும், ஹெய்ன்ஸ் மற்றும் உர்சுலா ஷார் தம்பதியினர் விருந்துபசாரம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles