21.6 C
New York
Friday, September 12, 2025

பெர்லின் புறப்பட்ட சுவிஸ் விமானம் சூரிச்சில் அவசரமாக தரையிறக்கம்.

சூரிச்சில் இருந்து இன்று காலை பெர்லினுக்குச் சென்ற LX974 இலக்க சுவிஸ் விமானம், மீண்டும் சூரிச் விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளது.

இன்று காலை 7:20 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த இந்த விமானம், காலை 7:42 மணிக்கு பெர்லினுக்கு புறப்பட்டது.

அந்த விமானம் 8 மணிக்குப் பின்னர், சூரிச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கி நேராக தரிப்பிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பல தீயணைப்பு வாகனங்களும் அங்கு விரைந்து சென்றன.

காலை 8.20 மணியளவில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

விமானம் திரும்புவதற்கு முன்னதாக, விமானிகள் 7700 என்ற அவசர அழைப்பை அனுப்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, விமானியின் அறையில் அசாதாரணமான வாசனை உணரப்பட்டதை அடுத்தே விமானம் மீளத் திருப்பி அழைக்கப்பட்டதாகவும், அனைவரும் பத்திரமாக திரும்பினர் என்றும் சுவிஸ் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதில் பயணம் செய்த பயணிகள் இன்று மாலை வியன்னா ஊடாக செல்லும் விமானத்தில் பெர்லின் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles