-0.1 C
New York
Sunday, December 28, 2025

ஒலிம்பிக் பாதுகாப்புக்கு சுவிஸ் பொலிஸ் குழு பாரிஸ் சென்றது.

ஒலிம்பிக் போட்டிகளின் போது பிரெஞ்சு பாதுகாப்புப் படையினருக்கு உதவுவதற்காக, 17  பொலிஸ் அதிகாரிகளை சுவிட்சர்லாந்து பாரிசுக்கு அனுப்பியுள்ளது.

இந்தக் குழுவில் உள்ள ஏழு பேர் குண்டுகளைக் கண்டுபிடித்து அகற்றும் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

ஒன்பது பேர், வெடிபொருட்களைக் கண்டறியும் மோப்ப நாய்களைக் கையாள்பவர்கள்.  ஒருவர், பயிற்சி பெற்ற தாக்குதல் நாயை வழிநடத்துபவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் அதிகாரிகள் Bern, Geneva, Fribourg, Neuchâtel, Vaud, Zug மற்றும் Zurich, கன்டோனல் பொலிஸ் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று சமஷ்டி பொலிஸ்  பணியகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 26 ஆம் திகதி முதல் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறும் வரை சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள் அங்கு பணியில் ஈடுபடுவார்கள்.

பிரெஞ்சு பொலிசாரின் வேண்டுகோளின்படி அவர்கள் அங்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles