Graubünden கன்டோனில் உள்ள Cazis இல் வெள்ளிக்கிழமை பிற்பகல் காரும் ட்ரக்டரும் மோதிக் கொண்ட விபத்தில், ஓட்டுநர்கள் இருவரும் காயங்களுக்குள்ளாகினர்.
கார் ஓட்டுநர், ஒரு பிரதான சாலையில் ட்ரக்டரை முந்திச் செல்ல முயன்ற போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

இந்தச் சம்பவத்தில் 60 வயதுடைய ட்ரக்டர் ஓட்டுநரும், 29 வயதுடைய கார் ஓட்டுநரும் காயமடைந்த நிலையில் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த வீதி ஊடான போக்குவரத்து 3 மணிநேரம் தடைப்பட்டது.
மூலம்.- bluewin


