7.1 C
New York
Monday, December 29, 2025

3 புதிய தாக்குதல் ட்ரோன்களை உருவாக்க திட்டம்.

தாக்குதல் ட்ரோன் தொழிற்துறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த சுவிஸ் மத்திய அரசாங்கம் ஒரு செயலணியை உருவாக்கவுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில், பல்லாயிரக்கணக்கான பிராங் நிதியுதவியுடன்,  மூன்று வகை தாக்குதல் ட்ரோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றை நட்பு நாடுகளுக்கும் விற்பனை செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ட்ரோன் உற்பத்தித் துறையை சேர்ந்த 100இற்கும் அதிகமான பிரதிநிதிகளுக்கும் சுவிஸ் ஆயுத தளபாடப் பணியகத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்-20min

Related Articles

Latest Articles