Neuchâtel கன்டோனில் உள்ள Neuenburg ரயில் நிலையத்தில் நேற்றிரவு பாரிய தேடுதல் ஒன்றைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
நேற்றிரவு 9.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, பொலிசாரால் கண்ணீர் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனை அடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர் என்று நேரில் கண்டவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் பயணிகள் ரயில் நிலையத்தில் அச்சத்துடன் சிதறி ஓடினர். பலர் இருமல் மற்றும் கண் எரிச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
மூலம்- 20min

