A13 நெடுஞ்சாலையில் Viamala சுரங்கப்பாதையில் நேற்று மாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
நேற்று மாலை 6.15 மணியளவில் பயணி ஒருவரை ஏற்றிச் சென்ற காரும், ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் பயணித்த காருமே நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் ஜெர்மன் நபர் காரின் சிதைவுகளுக்குள் சிக்கி நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டார்.
காயமடைந்த அவரும், மற்றைய காரின் சாரதியும் அதன் பயணியான கர்ப்பிணிப் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து A13 நெடுஞ்சாலையில் இரண்டு பக்கங்களிலும் 4 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டதாக Graubünden கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – 20min

