-2.2 C
New York
Wednesday, December 31, 2025

சுவிசில் இருந்து விமான சேவைகள் இடைநிறுத்தம்.

பாதுகாப்பு காரணங்களால் சுவிட்சர்லாந்தில் இருந்து  லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கான விமான சேவைகளை லுஃப்தான்சா குழுமம் இடைநிறுத்தியுள்ளது.

வரும் திங்கட்கிழமை வரை அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தநிறுவனம் அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே விமானங்களை ரத்து செய்ய திட்டமிடப்பட்ட போதும் ஒரு வாரத்திற்கு இந்த இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ், லுஃப்தான்சா மற்றும் யூரோவிங்ஸ் ஆகியன விமான நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் ரொக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய அரசாங்கம் பழிவாங்கும் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

இதையடுத்தே விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மூலம் –  Bluewin

Related Articles

Latest Articles