மத்திய அரசின் தவறான நிதிக் கணிப்பைத் தொடர்ந்து பெண்களின் ஓய்வூதிய வயது மீதான வாக்கெடுப்புக்கு எதிராக கிறீன் கட்சியினர் முறைப்பாடு செய்யவுள்ளனர்.
இதுகுறித்து கிறீன் கட்சியினால் நேற்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
கணக்கீட்டு தவறு தெரியவந்ததையடுத்து, வாக்குப்பதிவு குறித்து முறைப்பாடு அளிக்க கட்சிக்கு வெள்ளிக்கிழமை வரை காலஅவகாசம் உள்ளது.
ஜெனிவா மற்றும் சூரிச் மாகாணங்களில் உள்ள தனி நபர்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
கன்டோன்கள் இந்த விடயத்தை முதலில் கையாள வேண்டும். அவற்றின் முடிவு குறித்து பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
2033 ஆம் ஆண்டிற்கான AHV செலவினத்தை பெடரல் சமூக காப்பீட்டு அலுவலகம் (FSIO) சுமார் 4 பில்லியன் பிராங்குகளால் அதிகமாக மதிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், AHV நிதி முன்னோக்குகள் தவறாகக் கணக்கிடப்பட்டதன் காரணமாக பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 64 லிருந்து 65 ஆக உயர்த்துவதற்கான வாக்கெடுப்பு குறித்து சுவிஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (SGB), கிறீன் கட்சி மற்றும் SP பெண்கள் அமைப்பு என்பன கேள்வி எழுப்பின.
இதனால் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பை மீண்டும் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பெண்களின் ஒருவருட ஓய்வூதியம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பசுமைக் கட்சியினர் தெரிவித்தனர்.
மூலம் – Zueritoday

