சுவிட்சர்லாந்தின் Brienz நகரில் வீசிய புயல் காற்றினால், 70 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த புயல் காற்றினால் இரண்டு பேர் காயமடைந்தனர்.
திங்கள்கிழமை மாலை, கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்கட்டமைப்புகளை இந்தப் புயல் சேதப்படுத்தியது.
இதனால் குடியிருப்பாளர்கள் உடற்பயிற்சி கூடத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மாலை 6.30 மணியளவில் மிலிபாக் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நகரின் பல்வேறு பகுதிகளில் கற்பாறைகளும் மரங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
பாதுகாப்பு காரணங்களுக்காக, குடியிருப்பாளர்கள் குடிநீரை கொதிக்க வைத்துப் பருக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக சூரிச் விமான நிலையம் 20 விமானங்களை திருப்பி அனுப்பியது.
மூலம்- swissinfo