21.6 C
New York
Friday, September 12, 2025

செம்மறியாடுகளின் பாரிய இடம்பெயர்வு.

சுவிட்சர்லாந்தின்  பாரம்பரியமான செம்மறியாடுகளின்  பாரிய இடம்பெயர்வு நேற்று Graubünden  கன்டோனில்  உள்ள மலைப் பாதைகளில் நடந்தது.

Rhine  பள்ளத்தாக்கில் உள்ள Fläsch க்கு மேலே, 1,400 ஆடுகள் Guschasattel இல்  இருந்து, 2,560 மீட்டர் உயரமான Falknisக்கு அடியில் உள்ள Fläschertal பள்ளத்தாக்கிற்கு இடம்மாறின.

ஒக்டோபரில் ஆல்ப்ஸ் மலையிலிருந்து கீழே கொண்டு வரப்படும் வரை, இந்த செம்மறி ஆடுகள், அங்கு மேய்ச்சலில் ஈடுபடும்.

இந்த கண்கவர் இடம்பெயர்வு 2,000 மீட்டர் உயரத்தில் செங்குத்தான மலை ஓரங்களில் குறுகிய பாதைகள் வழியாக இடம்பெறும்.

இந்த நிகழ்வு பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் நீண்டகால பாரம்பரியம் கொண்டது.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஆடுகளின் இந்த மிகப்பெரிய கூட்டம் புறப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், முதல் தொகுதி விலங்குகள் Fläschertal பள்ளத்தாக்கை அடைந்தன.

சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தை இந்த ஆடுகள் கடந்து சென்றன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles