4.8 C
New York
Monday, December 29, 2025

கனடாவில் ஆனையூரானின் “நீ வாழ நான்” நூல் வெளியீடு

ஆனையூரானின் “நீ வாழ நான்” நூல் வெளியீட்டு விழா கனடாவில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கனடிய பழங்குடியினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களின் நிலவுடமையை ஏற்றுக் கொள்ளும் உறுதிமொழி வழங்குவதுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

கனடிய. தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை அடுத்து, வண பிதா ரோசான் அடிகளார் மற்றும்,     திரு, திருமதி ஜெயராசசிங்கம்  ஆகியோர் மங்கல விளக்கேற்றலில் பங்கேற்றனர்.

நூல் வெளியீட்டு விழாவுக்கு கனடிய தமிழ் வானொலி சிரேஷ்ட அறிவிப்பாளர் இராஜ முகுந்தன் தலைமை தாங்கினார்.

தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து, வரவேற்புரையை திருமதி டேனிஷ்கோட் யசோதா நிகழ்த்த, வணபிதா றோசான் அடிகளார்ஆசியுரை  வழங்கினார்.

ஊடகவியலாளரும், யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், நூலாசிரியர் ஜெராட்டின் நண்பருமான  ஆறுமுகராசா சபேஸ்வரன் நூலாசிரியரை அறிமுகம் செய்து, வைத்தார்.

கவிஞர் சசிகலா ஜீவானந்தம்  நூல் அறிமுகமுக உரையை நிகழ்த்த ஆசிரியர்  சண்முகநாதன் கஜேந்திரன் வெளியிட்டுரையை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, திருமதி ஜெயராசசிங்கம் திரேசம்மா நூலை வெளியிட்டு வைக்க, முதல் பிரதியை ஆரோக்கியநாதன் ஜெயராசசிங்கம் வழங்க, ஜெராட் தர்மிகா அதனைப் பெற்றுக் கொண்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் -கனடா வளாக விரிவுரையாளர், முனைவர் வாசுகி நகுலராஜா நூல் விமர்சன உரையை நிகழ்த்தினார்.

ஊடகவியலாளரும், சுவிஸ் ஊடக மையத்தின் தலைவருமான ஜெராட் ஜெயராசசிங்கம் நூலாசிரியர் ஏற்புரையை நிகழ்த்தினார்.

இதையடுத்து மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

Related Articles

Latest Articles