சுவிட்சர்லாந்தில் புதிய அணுமின் நிலையங்கள் கட்டப்படுவதற்கு கிறீன் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அணுசக்திக்கு எதிர்காலம் இல்லை, எமது எதிர்காலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் தான் என்று கட்சியின் தலைவர் லிசா மஸ்ஸோன் நேற்று பாசலில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கூறினார்.
சுவிட்சர்லாந்தில் புதிய அணுமின் நிலையங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, மற்றொரு வாக்கெடுப்புக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், நாங்கள் வெற்றி பெறுவோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அணுமின் நிலையங்கள் எதுவும் கட்டப்படக் கூடாது, என்றும், அணுசக்தியை படிப்படியாக நிறுத்தவும், சுவிஸ் வாக்காளர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்தனர்.
மூலம்- Theswisstimes