ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர், பல்வேறு ஆலயங்களிலும் சமயத் தலைவர்களிடமும் ஆசி பெற்றுக் கொண்ட தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் , செல்வம் அடைக்கலநாதன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் யாழ் மாநர முதல்வர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பெரும திரளான மக்கள் கலந்து கொண்டனர்.