சுவிற்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பட்டியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அவரது கைரேகை பரிசோதனைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பொடி பட்டியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுப்பது தொடர்பில் பொலிசார் கவனம் செலுத்தியுள்ளனர்.
அண்மையில் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் பொடி பட்டி , கிளப் வசந்தவின் கொலைக்கு திட்டமிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

