21.6 C
New York
Friday, September 12, 2025

சுவிஸ் உள்ளிட்ட 35 நாட்டவர்களுக்கு இலவச விசா

35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலவச விசா வசதியின் கீழ், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

இந்த திட்டத்திற்னு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்ரேலியா, டென்மார்க், போலந்து, கசகஸ்தான், சவூதி அரேபியா,. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான், பிரான்ஸ்,  அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஒஸ்ரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து ஆகிய 35 நாடுகளிற்கே இந்த இலவச விசா வசதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles