5.3 C
New York
Tuesday, December 30, 2025

ஜனாதிபதி வேட்பாளர் திடீர் மரணம்.

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், அய்ட்ரூஸ் முகமட் இலியாஸ் (வயது 78) நேற்று  காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக புத்தளம் ஆதார  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமாகியுள்ளார்.

1994ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  வேட்பாளராக போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் பதவி வகித்தார்.

அதன் பின்னர் நடந்த பல ஜனாதிபதி தேர்தல்களில் அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles