21.6 C
New York
Friday, September 12, 2025

சூரிச் புகலிடக் கோரிக்கை மையத்தில் பொலிஸ் நடவடிக்கை.

சூரிச்  eutschenbach நகரில்  புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கட்டடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய  பொலிஸ் நடவடிக்கை முடிவுக்கு வந்திருக்கிறது.

துருக்கியேயை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர்,  ஜன்னலுக்கு வெளியே குதிக்கப் போவதாக  அச்சுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7:45 மணியளவில் இந்த நடவடிக்கை தொடங்கியது.

சூரிச் நகர காவல்துறை கோரிக்கையின் பேரில் தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர். தெரு முற்றுகையிடப்பட்டது.

24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருந்த பொலிஸ் நடவடிக்கை இன்று அதிகாலை, சுமார் 4:30 மணியளவில், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

குறித்த நபர்  இன்று அதிகாலை மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ஒரு வருடமாக புகலிட கோரிக்கை தொடர்பான பதிலுக்காக காத்திருந்த 33 வயதான அந்த நபர், மனைவி பிள்ளைகளை பிரிந்து உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles