4.4 C
New York
Monday, December 29, 2025

சுரங்கப் பாதை வெள்ளத்தில் சிக்கிய தாயும் பிள்ளையும் மீட்பு.

Zug கன்டோனில் நேற்று பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

Baar, Cham, Steinhausen, Neuheim மற்றும் Hünenberg ஆகிய நகரங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மழைக்கு முன்னர் வீசிய சூறைக் காற்றினால், மரங்கள் முறிந்து வீதிகளில் வெள்ள வடியாமல்  தேங்கியது.

இதனால் நிலத்தடி அறைகள், வாகனத் தரிப்பிடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

பார் நகராட்சியில் உள்ள Südstrasse இல், ஒரு கார் பாதாள கடவையில் வெள்ளத்தில் சிக்கியது.

காரில் இருந்த ஒரு பெண்ணையும் அவரது சிறு குழந்தையையும் தீயணைப்புப் படையினர் தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.  

இதையடுத்து. பாரில் உள்ள Geissbühl சுரங்கப்பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related Articles

Latest Articles