சுவிஸ் SVP கட்சியின் முன்னாள் கன்டோனல் கவுன்சிலர் Bernhard Diethelm இற்கு சூரிச் உயர் நீதிமன்றம் இன்று ஒன்பது மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
41 வயதான அவர், பெண் ஒருவரை தாக்கி கழுத்தை நெரித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
- Advertisement -

அதற்காக அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, உயர்நீதிமன்றம் முன்னாள் அரசியல்வாதிக்கு 1,000 பிராங்குகள் அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பு இன்னும் முடிவாகவில்லை.
மூலம் -Zueritoday


