19.4 C
New York
Sunday, May 17, 2026

ஆதரவளிக்காத 5 அமைச்சர்களை நீக்கினார் ரணில்.

5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார்.

அதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலீ குமாரசிங்க, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கீதா குமாரசிங்க சஜித் பிரேமதாசவையும்,ஏனைய நால்வரும் நாமல் ராஜபக்சவையும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே இவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles