20.4 C
New York
Monday, August 17, 2026

சூரிச் விமான நிலையத்தில் 160 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது.

சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம் சூரிச் விமான நிலையத்தில் மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.

மூவரும் 160 கிலோகிராம் கஞ்சாவை ஐரோப்பாவிற்கு கடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதுகள் கடந்த 5ஆம் திகதிக்கும் 8ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளன.

26 வயதான அமெரிக்கப் பெண்ணும், 27 வயதான மலேசிய ஆணும் தலா 47 கிலோ கிராம் கஞ்சாவை இரண்டு சூட்கேஸ்களில் எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டனர்.

56 வயதான டச்சுக்காரரான மூன்றாவது சந்தேக நபர் தனது பயணப் பையில் சுமார் 65 கிலோகிராம் கஞ்சாவுடன் பயணம் செய்தார்.

மூன்று பேரும் பாங்கொக்கில் இருந்து ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய  திட்டமிட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைக்காக அவர்கள் சூரிச் கன்டோனல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles