21.6 C
New York
Friday, September 12, 2025

பட்டப்பகலில் நடு வீதியில் தீக்குளித்தவர் படுகாயம்.

Olten இற்கு அருகிலுள்ள Hägendorf இல் இன்று பகல்  ஒருவர்  வீதியில் தனக்குத் தானே நெருப்பு மூட்டி தீக்குளித்தார்.

அவர் அடையாளம் தெரியாத திரவத்தை தன் மீது ஊற்றி,  தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார் என Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலத்த காயமடைந்த அவர், ரேகா ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்தோ, அடையாளம் தெரியாத நபரின் நோக்கம் குறித்தோ எந்த தகவலையும் தற்போது காவல்துறையால் தெரிவிக்க முடியவில்லை.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles