20.4 C
New York
Monday, August 17, 2026

இன்றிரவு தொடங்குகிறது குளிர்- நாளை முதல் உறைபனி.

நாளை முதல் மூன்று நாட்களுக்கு சுவிட்சர்லாந்து மத்திய அரசு உறை பனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை சுவிட்சர்லாந்தில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.

நாளை வியாழன் இரவு முதல் மலைகளில் உறை பனி விழத் தொடங்கும்.

இதனால், சுவிஸ் அரசு அடுத்த சில நாட்களுக்கு 2 ஆவது மட்ட பனி எச்சரிக்கை  விடுத்துள்ளது. இது ஆரம்பத்தில் வியாழன் பத்து மணி முதல் சனிக்கிழமை பத்து மணி வரை செல்லுபடியாகும்.

இதனால் 1,600 மீட்டருக்கு மேல் உயரமுள்ள பல பகுதிகள் பாதிக்கப்படும்.

1600 மீட்டருக்கு மேல் உள்ள பகுதியில், 25 முதல் 45 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

1200 மீட்டருக்கு மேல், ஐந்து முதல் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும்.

மூலம் -20min.

Related Articles

Latest Articles