-0.1 C
New York
Sunday, December 28, 2025

சனிஜாவை வெளியேற்றும் முடிவினால் GLP கட்சிக்குள் பிளவு.

குழந்தை இயேசு மற்றும்  அன்னை மரியாளின் படத்தின் மீது  Sanija Ameti துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தினால், GLP கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

அவர் இதற்காக மன்னிப்புக் கோரி பதவி விலகியுள்ள போதும்,  அவரை கட்சியில் இருந்து முற்றாக நீக்க வேண்டும் என்று தாய்க் கட்சி பிரேரணையை முன்வைத்துள்ளது.

இந்த  நிலையில், ஏனைய உறுப்பினர்கள் அவரை கடுமையாக நடத்துவதை விமர்சித்து வருகின்றனர்.

இதனால், நகர மற்றும் கன்டோனல் GLP ரீதியாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, கட்சியில் இருந்து Sanija Ameti  யை நீக்குவதற்கான நடவடிக்கைகளை லிபரல் கிறீன் கட்சி முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை நடந்த சூரிச் நகர நாடாளுமன்றக் கூட்டத்தில், Sanija Ameti கலந்து கொள்ளவில்லை.

இதனிடையே, பல சுவிஸ் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் இப்போது Sanija Ametiயை ஆதரித்து கருத்து வெளியிடுவதுடன் அவருக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles