23.5 C
New York
Thursday, September 11, 2025

உலகின் மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்துக்கு முதலிடம்.

உலகின் மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது.

யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது.

2-வது இடத்தில் ஜப்பான், 3-வது இடத்தில் அமெரிக்கா, 4-வது இடத்தில் கனடா, 5-வது இடத்தில் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.

வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-வது இடத்தில் உள்ளது.  சென்ற ஆண்டு 30-வது இடத்தில் இருந்த இந்தியா  தற்போது 3 இடங்கள் பின்னகர்ந்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

 ஆசியாவிலிருந்து ஜப்பான், சிங்கப்பூர், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளே முதல் 25 இடங்களில் உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 17-வது இடத்திலும் கத்தார் 25-வது இடத்திலும் உள்ளன.

Related Articles

Latest Articles