-0.7 C
New York
Sunday, December 28, 2025

லிம்மாட் ஆற்றில்  குதித்தவர் சடலமாக மீட்பு.

மாவட்டம் 1 இல் உள்ள லிம்மாட் ஆற்றில்  குதித்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6:30 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

Mühlesteg சற்று முன்பாக, Limmatquai யில் உள்ள லிம்மாட் ஆற்றில், ஒரு நபர் குதித்ததாக சூரிச் நகர பொலிஸ் செயல்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது.

அந்த வழியாகச் சென்ற இருவர் உடனடியாக ஆற்றில் குதித்து அந்த நபரைத் தேடினர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சுழியோடிகள்  நீருக்கடியில் தேடுதலைத் தொடர்ந்தனர்.

அதன்போது, குதித்தவரை சடலமாகவே மீட்க முடிந்தது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles