20.1 C
New York
Wednesday, September 10, 2025

புகலிட மையங்களில் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளை அதிகரிக்க சட்டம்.

கூட்டாட்சி புகலிட மையங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து,  பாதுகாப்பு  நடவடிக்கைகளை எடுப்பதற்கேற்ற வகையில் சுவிஸ் பிரதிநிதிகள் சபை  சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

சுவிஸ் பிரதிநிதிகள் சபையில் புகலிடச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு ஆதரவாக 104 வாக்குகளும், எதிராக 87 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கூட்டாட்சி புகலிட மையங்களில் குடியிருப்போர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து முன்மொழிவுகளுக்கும் சபை ஒப்புதல் அளித்தது.

அதற்கமைய, கூட்டாட்சி புகலிட மையங்களைச் சுற்றியுள்ள பிரதேசம் நீடிக்கப்பட வேண்டும், புகலிடக் கோரிக்கையாளர்களின் நடத்தை பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்குக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்வுக்கான அரச செயலகத்தின் ஊழியர்கள், புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து செல்போன் போன்ற மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்து பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த திருத்தச் சட்டம் செனட் சபையில் வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles