-0.7 C
New York
Sunday, December 28, 2025

சாகசம் காட்ட முயன்ற விமானி சேதங்களை விளைவித்தார்.

சூரிச் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்தை உரசிக் கொண்டு பயணித்த இராணுவ ஹெலிகொப்டரின் விமானி, சேதங்களை விளைவித்ததுடன், ஒருவரை காயப்படுத்தினார்.

ஓகஸ்ட் 14ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் குறித்து மத்திய அரசும் இராணுவமும் விசாரணை நடத்தி வருகின்றன.

இராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட விமானி, தனது சகாக்களுக்கு சாகசம் காட்ட முயன்று, கட்டுப்பாட்டுக் கோபுரத்துக்கு நெருக்கமாகவும் தரையை அண்டியும் ஹெலிகொப்டரை செலுத்தினார்.

இதனால் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பணியில் இருந்த ஒருவர் காயம் அடைந்தார்.

மேலும் பல கட்டடங்களும், கார்களும் சேதம் அடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூலம் -20min

Related Articles

Latest Articles