-0.7 C
New York
Sunday, December 28, 2025

தொடங்கியது வாக்களிப்பு – அடுத்த ஜனாதிபதி யார்?

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு ஆரம்பமாகியது.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பிற்பகல் 4 மணிவரை வாக்களிக்க முடியும் என்றும் அதற்குப் பின்னர் எவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் வன்முறைகள் நடந்தால், அங்கு வாக்குப்பதிவு ரத்துச் செய்யப்பட்டு மீள் வாக்களிப்பு நடத்தப்படும் என்றும், அதனால் முடிவுகள்  வெளியிடப்படுவது தாமதமாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இன்று மாலை 4.15 மணியளவில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் நாளைக்குள் முடிவுகளை வெளியிடக் கூடியதாக இருக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles