-3.3 C
New York
Sunday, December 28, 2025

அனுரவே அடுத்த ஜனாதிபதி – இன்று மாலை பதவியேற்பார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க இன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியிடப்பட்டால் இன்று மாலை அவர் ஜனாதிபதியாக பதவியேற்பார் என தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவே அடுத்த ஜனாதிபதி என்பது தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர், நாங்கள் சஜித் பிரேமதாசவிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தோம் . ஆனால் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை.

அனுரகுமார திசநாயக்கவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி  என்பது தற்போது தெளிவாகின்றது.

ஜனநாயகத்தின் உணர்வின் அடிப்படையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் நான் அவரை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.“ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் வெற்று பெறுவார் என எதிர்பார்க்கப்படும் அனுரகுமார திசநாயக்கவுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles